பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆல்ை, நேரு மகிழ்ச்சி அடையவில்லை. அவர் முகம் மாறிவிட்டது. இவ்வளவு பெரிய மாலை எதற்கு? என்று அவர் கோபமாய்க் கேட்பதுபோல் இருந்தது. அப்போது, நான்கு சிறு குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பூச்செண்டைத் தூக்கிக் கொண்டு மேடையில் ஏறினர்கள். பூச்செண்டு என்ருல், சாதாரணப் பூச்செண்டா? ஒரு பெரிய குடை போலவே அது இருந்தது! மிகக் கனமாகவும் இருந்தது! அதனல், நாலு பேர் சேர்ந்தும் அதைத் துக்க முடியவில்லை; தள்ளாடினர்கள். நேரு இதைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய கோபம் பறந்தது. முகம் மலர்ந்தது. அந்தக் குழந்தைகளை நோக்கி ஓடினர். அவர்களிட மிருந்த பூச் செண்டைத் தம் கையிலே வாங்கினர். குடை பிடிப்பது போல் தோளிலே சாய்த்துப் பிடித் துக்கொண்டார். பெருமையோடும், மகிழ்ச்சி யோடும் இங்கும் அங்குமாக நடந்து வேடிக்கை காட்டினர். அந்தக் காட்சியைக் கண்ட குழந்தைகள் 'ஆ.ஊ.ஊ என்று ஆனந்தக் கூச்சல் போட் டார்கள். சிறுமி கொடுத்த ரோஜா சென்னைக் கூட்டத்தில் நேரு பேசப் போகும் சமயத்தில், ஒரு சிறு பெண் அவர் அருகிலே ஒடி ள்ை. அவளது மலர் போன்ற கைகளிலே ஒரு மலர் இருப்பதை நேரு கண்டார். என்ன மலர்? ரோஜா மலரேதான் அதை அவள் நேருவிடம் நீட்டிய போது, அவரது முகம் மலர்ந்தது. உடனே, அதை