பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சியோடு வாங்கித் தமது மேல் அங்கியில் செருகிக் கொண்டார். பிறகு அந்தச் சிறுமியை அன்புடன் தட்டிக் கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்டு, "ஆஹா! அந்தப் பெண் எவ்வளவு அதிர்ஷ்டசாலி! அவளைப் போல்' நம் முதுகிலும் நேரு தட்டிக் கொடுக்கவில்லையே! தட்டிக் கொடுக்காத போனுலும், ஓங்கி இரண்டு அடியாவது கொடுத்திருக்கலாமே! அப்போது எவ் வளவு இன்பமாக இருக்கும்!” என்று எத்தனையோ குழந்தைகள் நினைத்திருப்பார்கள்! நேரு அந்தக் கூட்டத்தில் பேசுகையில், "நீங்கள் பாரத மாதாவுக்கு-ஜே என்று கோஷம் போடுகிறீர்கள். 'பாரத மாதா என்ருல் என்ன? நீங்கள், நான், நம்மைப் போன்ற கோடிக் கணக் கான மக்கள் ஒன்று சேர்ந்ததுதான் பாரத மாதா. நாம் ஒவ்வொருவரும் இந்தியாவின் ஒரு துண்டு. ஒரு பெரிய பொருளின் சிறு சிறு துண்டுகளாக இருக்கிருேம். ஆனல், எல்லோருமே இந்தியாவின் சமமான துண்டுகள். ஆகையால், நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாடு வளம் பெற உழைக்க வேண்டும்” என்று தெளிவாக அவர்கள் மனத்திலே பதியும்படி கூறினர். - - நோய் பறக்தது! டில்லியிலிருந்த அக்திகள் விடுதிக்கு நேரு வந்தார். பாகிஸ்தானிலிருந்து வீட்டைவிட்டு, நிலத்தை விட்டு, சொத்து சுகங்களை யெல்லாம் விட்டு இந்தியாவுக்கு ஓடிவந்த பல அகதிகள் அங்கு இருந்தார்கள். அவர்களின் சோகக் கதைகளே யெல்லாம் கேட்டு நேரு உள்ளம் உருகினர்.