பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளெல்லாம் தரையில் இருந்தார்கள். நாடகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்த நேரு, சோபாவை விட்டு மெல்லக் கீழே இறங்கினர். தரையிலே ரும் குழந்தை போல் சம்மணம் போட்டு ட்கார்ந்துவிட்டார் : அப்போதுதான் அவருக்கு உண்மையான ஆனந்தம் பிறந்தது. அருகிலிருந்த குழந்தைகளின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். முதுகைத் தடவிக் கொடுத் தார். இடையிடையே சில கேள்விகளும் கேட்டார். அவரைச் சுற்றி உட்கார்ந்திருந்த குழந்தைகளுக் கெல்லாம் அளவில்லாத ஆனந்தம். நாடகம் முடிந்ததும், ஒரு சிறுவன், " நேரு மாமா என் பக்கத்தில்தான் இருந்தார். என் முது கிலே தட்டிக் கொடுத்தார். என்ன படிக்கிருய் ? எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிருய்? என்னென்ன விளையாட்டுக்கள் தெரியும்? என்றெல்லாம் கேட் அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே. என்ன பெருமிதம்:

ேகருவின் ஆசை

குழந்தைகளுக்காக எந்த நல்ல காரியம் செய் தாலும் நேரு அதற்கு ஆதரவு தருவார். நேரம் கிடைத்தால் தாமும் அதில் கலந்து கொள்வார். புதுடில்லியில் குழந்தைகள் பூங்காவை அவர் துவக்கிவைத்தார். அப்போது விளையாட்டு ரயில் வண்டி ஒன்று அங்கே விடப்பட்டது. அதில் குழந்தைகளோடு குழந்தையாக நேருவும் ஏறி உட்கார்ந்து சுற்றி வந்தார்.