பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிப் பேசுகையில், " எனக்குக் குருவாக இருந்தவர்கள் எல்லாரும் மிகப் பெரிய மனிதர்கள். 邻 ※ %. r ళ . జ్ఞ § ఫ్రీ ஆலுைம், எல்லோரையும் விடப் பெரியவர் . .... என்று இழுத்தார். - உடனே, காந்திஜி, காந்திஜி” என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் எழுந்தன. ஒரு நாள் காலே நேரம், நேருவைக் கான 18 வயது அமெரிக்கச் சிறுமி ஒருத்தி அவரது மாளிகைக்குச் சென்றிருந்தாள். நேரு அவளே அன்பாக வரவேற்ருர், சிறிது நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவளுடன் சேர்ந்து சிற்றுண்டி அருந்தினர்.பிறகு, மது...! பெபிடா...!" என்று குரல் கொடுத்தார். உடனே அவர் அன்பாக வளர்த்துவந்த இரண்டு அழகான நாய்கள் அங்கு ஓடிவந்தன. அவற்றை அவர் தட்டிக் கொடுத்தார். சில நிமிஷங்கள் அவற்றுடன் விளையாடினுர். பிறகு, இங்கே பீமன், அர்ஜூனன் என்று இரண்டு பேர் இருக்கிருர்கள். நீ அவர்களைப் பார்க்கவில்லையே! வா, காட்டுகிறேன்” என்று கூறி அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு சென்ருர். அர்ஜூனனும், பீமனும் யாராக இருக்கும் என்று அவள் யோசித்துக்கொண்டே சென்றபோது, "இதோ பார், இவன்தான் பீமன், இவன்தான் அர்ஜூனன்” என்று கூறி அங்கிருந்த இரண்டு புலிக் குட்டிகளைக் காட்டினர். அவற்றுடன் சிறிது