பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரம் பேசினர். அப்புறம், சிறிது துரத்திலிருந்த நாலந்து பிராணிகளைக் காட்டினர். பார்ப்பதற்கு அவை விநோதமாயிருந்தன. பூனே முகமும், கரடி உடலும், நரி வாலும் அந்தப் பிராணிகளுக்கு இருந்தன. இவை இமயத்தில் வசிக்கும் பிராணிகள். பண்டா என்று பெயர்” என்ருர் நேரு. நேருவையும், அவரது அன்புக்குரிய பிராணி களையும் பார்த்ததில் அச்சிறுமிக்கு அளவில்லாத ஆனந்தம். அவள் விடை பெறும்போது, நேரு அவளுக்குத் தாம் எழுதிய உலக சரித்திரம்’ என்ற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். அதனுடன், ஒரு சிறு பொம்மையையும் அவர் ப்ரிசாக வழங்கி ஞர். மகாத்மா காந்தி, அவர் அருகிலே ஒரு வெள் ளாடு, இரண்டு மரங்கள், சுற்றிலும் வேலி, ஒரு சிறு வீடு, அந்த வீட்டுக் கூரை மேல் ஒரு பறவை. இவ் வளவும் அந்தச் சிறு பொம்மைக்குள் அடங்கியிருந் தன! - - அச்சிறுமி அமெரிக்கா சென்றதும், நேரு குழந்தைகளிடத்திலும், பிராணிகளிடத்திலும் எவ் வளவு பிரியமாயிருக்கிருர் என்பதை அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்தாள். அதைப் படித்த அமெரிக்கக் குழந்தைகளுக்கு நேருவைக் காண வேண்டும் என்ற ஆசை மேலும் அதிகரித் திதி. நேரு ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக வந்தார். காரைவிட்டு இறங்கி மேடையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன்,