பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் நான் முந்தி, நான் முந்தி என்று அவருடன் விளையாடப் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தார்கள். r ஆல்ை, ஒரே ஒரு சிறுமிமட்டும் கூச்சப்பட் டுக்கொண்டே நின்ருள். அவளுக்கும் நேருவோடு விளையாட ஆசைதான். அவள் தனியாக ஒதுங்கி நிற்பதை நேரு பார்த்துவிட்டார். சற்றும் எதிர் பாராத சமயத்தில் அவள் அருகில் ஓடினர்; திடீ ரென்று அவளது கால வாரிவிட்டார். ஆல்ை, அவள் கீழே விழுவதற்கு முன்பு, சட்டென்று தாங்கிப் பிடித்தார். கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறித் த ட் டி க் கொடுத்தார். மறு விநாடியே அவளது கூச் சம் பறந்தது. சிறிது நேரத்தில் அவளும் நேருவின் முதுகில் சவாரி செய்யத் தொடங்கிவிட்டாள் ! விங்தை உலகில் மிக்கி மவுஸ் , மூன்று இளம் பன்றிகள் போன்ற பல கார்ட்டுன் திரைப் படங்களைப் பார்த் திருப்பீர்கள். அவற்றைத் தயாரித்து உலகப் புகழ் பெற்றவர் வால்ட் டிஸ்னி என்ற அமெரிக்கர். அவர் குழந்தைகளுக்காகவே 300 ஏக்கர் பரப்பில் ஒரு நகரம் அமைத்திருக்கிருர். டிஸ்னி லாண்ட் ’ என்பது அதன் பெயர். அது ஒர் அற்புத உலகம். கண்கொள்ளாக் காட்சிகளே அங்கே காணலாம். வேடிக்கைகள், ராட்டினங்கள், வியப்பூட்டும் பல காட்சிகள் எல்லாம் அங்கு உண்டு. . குழந்தைகளுக்கு இப்படி ஒரு நகரம் இருக் கிறது என்ருல், நேரு அதைப் பார்க்காமல் இருப்பாரா? 1961-ல் அமெரிக்கா சென்றபோது,