பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரு டிஸ்னி லாண்டிற்கும் சென்றிருந்தார். அவர் அங்கே சென்ற நாள் மிகவும் முக்கியமான நாள். நேரு பிறந்த நாள்தான் அது! அதனுல், அங்கிருந்த குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! மகிழ்ச்சி மிக்க பிறந்தநாள் வருக, வருக, வருகவே ! என்று உற்சாகமாகப் பாடி வரவேற்புக் கொடுத் தார்கள். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து வால்ட் டிஸ்னியும் பாடிப் பரவசமுற்ருர். சிவப்புக் கழுத்துக் குட்டை 1961-ல் நேரு ரஷ்யா சென்றிருந்த சமயம், அவரை அந்நாட்டுக் குழந்தைகள் மிகவும் ஆவ லோடு வரவேற்ருர்கள். அப்போது அவர் பல முன்னணி இளைஞர் முகாம்களுக்குச் சென்றிருந் தார். அங்கிருந்த சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து சுற்றினுர். ஆடல் பாடல்களில் கலந்து கொண்டார். நேருவிடம் அவர்களுக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. தங்கள் முகாம்களின் சிறப்பு உறுப்பினராக இருக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் சரி என்ருர். உடனே அவர் கழுத்திலே, சிவப்புக் கழுத்துக் குட்டை ஒன் றை அவர்கள் அணிவித்தார்கள். முன்னணி இளே ஞர்களுக்கான அடையாளச் சின்னம் அதுதான். நேருவுக்கு அதை அணிவித்தபோது, வெகு நேரம் விடாமல் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினுர்கள், ரஷ்யக் குழந்தைகள்.