பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவருக்கு வயது எழுபது. அவரை நாம் எப்படி அழைப்போம் ? தாத்தா என்று அழைப்போம். ஆல்ை, எழுபது வயதைக் கடந்த பிறகும் நேருவை நாம் எப்படி அழைத்தோம் ? தாத்தா என்ரு ? இல்லே. மாமா என்றுத்ான் அழைத்தோம். நேரு மாமா, நேரு மாமா என்று ஆசையோடு கூறி னுேம். இதற்குக் காரணம் என்ன? அவர் எப்போதும் இளைஞரைப் போலவே இருப்பார். நிமிர்ந்து நடப்பார். சுறுசுறுப்பாக இருப்பார். குழந்தைகளோடு குழந்தையாக ஓடி ஆடி விளையாடுவார். சிரித்துப் பேசி மகிழுவார். என்றும் உற்சாகமாக இருப்பார். அவருடைய உள்ளம் குழந்தை உள்ளம். அதல்ைதான் அவர் 74-வது வயதிலும் இளைஞ ராக இருந்தார். . குழந்தைகள் என்ருல் நேருவுக்குக் கொள்ளே ஆசை. குழந்தைகளுக்கும் நேரு மாமா என்ருல் அளவில்லாத பிரியம். 普 நேரு 1889-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். அவர் பிறந்த நாளே, குழந்தைகள் தினமாக நாடு முழு வதும் கொண்டாடுகிருேம். அன்று, நீங்கள் ஆடுகிறீர்கள்; பாடுகிறீர்கள்; அணிவகுத்துச் செல் கிறீர்கள்; கூட்டம் போட்டுப் பேசுகிறீர்கள், நேரு