பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுக்கு யானைக்குட்டி 1949ஆம் ஆண்டு. நேருவுக்கு ஒரு கடி: வந்தது. அது கனமாக இருந்தது. அதில் பல வண்ணங்களில் ஜப்பான் தேசத் தபால்தலைகள் ஒட்டப்பட்டிருந்தன. நேரு அதைப் பிரித்துப் பார்த்தார். அதில், எங்கள் மிருகக் காட்சி சாலைக்கு ஒரு யானே வேண்டும், தயவுசெய்து அனுப்பி வையுங்கள் என்று அவருக்குக் குழந்தைகள் எழுதி யிருந்தார்கள். குழந்தைகள் என்ருல், இரண்டா நாலா ? 2000 குழந்தைகள் கையெழுத் து ட் போட்டு அனுப்பியிருந்தார்கள். எல்லோரும் ஜட் பான் தேசத்துக் குழந்தைகள். இதைத் தவிர தனி யாகவும் சில குழந்தைகள் நேருவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். அவற்றில் ஒரு சிறுமி எழு திய கடிதம் இதோ இருக்கிறது. படி த் து ட் பாருங்கள். டோக்கியோ நகரில் இருந்த மிருகக் காட்சி சாலை யுத்த தில் அழிந்துவிட்டது. திரும்பவும் அதற்குப் புத்துயி கொடுத்து வருகிருர்கள். இங்குள்ள பன்றிகளையும், பறவை களையும் பார்த்துப் பார்த்து எங்களுக்குச் சலித்துப் போய்விட்டது ஆதலால், எங்கள் உள்ளத்தைக் கவரக்கூடிய யானையை பார்க்க ஆசை ஆசையாக இருக்கிறது. தயவுசெய்து, சீக்கிரப் அனுப்பிவையுங்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கும். அன்புள்ள, சுமிகோ கண்ட்ஸ்க இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பு ஜப்பான் மிருகக் காட்சி சாலைகளில் யானைகள் இருந்தன. ஆல்ை அவை யுத்த பீ தி யி ல் ஊருக்குள் வந்து நாசம் செய்துவிடுமோ என்று பயந்து, அவைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டா