பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாம். அதனுல்தான் ஜப்பானில் அப்போது ஒரு யானைகூட இல்லாதிருந்தது. அந்தக் குழந்தைகளின் கடிதத்தைப் பார்த்து விட்டு நேரு சும்மா இருப்பாரா ? விரைவில் ஒரு யானேக்குட்டியை அனுப்பி வைக்கிறேன் என்று அந்தக் குழந்தைகளுக்குப் பதில் எழுதினர். அதே போல், மைசூரிலிருந்த பெண் யானைக் குட்டியை ஜப்பானுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அந்த யானேக்குட்டி மைசூரிலிருந்து ரயில் ஏறி கல்கத்தா சென்றது. கல்கத்தாவிலிருந்து கப்பல்ஏறி ஜப்பானே அடைந்தது. அனுப்பும்போது அந்த அழகான யானேக் குட்டிக்கு ஒர் அழகான பெயரைச் சூட்டி ஞர்கள். இந்திரா-ஆம், நேருவின் புதல்வி பெயரும் அதுதானே ! இந்திரா ஜப்பான அடைந்ததும் அங்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் கூடி வரவேற் பளித்தனர். இந்திராவைப்பற்றி ஒரு கு ட் டி ப் புத்தகம்கூட வெளியிட்டுவிட்டனர். அந்தச் சம யம் ஜப்பானில் எந்தப் பத்திரிகையைப் பார்த் தாலும் இந்திராவின் புகைப்படம் அச்சாகி இருந் தது. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும், அதன் கையிலே இந்திராவைப் பற்றிய புத்தகம் இருந்தது. ஜப்பான் குழந்தைகளுக்கு நேரு இந்திராவை அனுப்பியபோது, "இது நான் அனுப்பும் பரிசல்ல; இந்தியக் குழந்தைகள் அனைவரும் அனுப்பும் அன்பு பரிசு. அவர்களின் நல்வாழ்த்தையும், அன்பையும் இந்திரா தாங்கி வருகிருள்” என்று எழுதினர். இதே போல் அமெரிக்கா, துருக்கி, ஜெர்மனி, அரேபியா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாலந்து, ரஷ்யா முதலிய நாடுகளுக்கெல்லாம் யானைக் குட்டி களே அனுப்பிஅந்தத் தேசக் குழந்தைகளையெல்லாம்