பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் வரும். நம் தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் வரும்; வெளி நாடுகளிலிருந்தும் வரும். அவ்வளவு கடிதங்களேயும் படித்துப் பார்க்க நேருவுக்கு நேரம் ஏது ? எல்லாவற்றையும் அவரது உதவியாளர்கள் படித்துப் பார்ப்பார்கள். முக்கிய மான கடிதங்களே அவரிடம் காட்டுவார்கள். அவற் றிற்கு என்ன பதில் எழுத வேண்டும் என்று நேரு சொல்லுவார். உதவியாளர்கள் அவர் சொன்னபடி எழுதி, அவர்களே கையெழுத்துப் போட்டு அனுப்புவார்கள். மிக முக்கியமான கடிதங்களில் மட்டும் நேருவே கையெழுத்திட்டு அனுப்புவார். அப்படி நேருவே கையெழுத்திட்டுக் குழந்தை களுக்காகப் பல கடிதங்கள் எழுதியிருக்கிருர், ஒரு சிறுவன் எழுதிய கடிதத்தையும், அதற்கு நேரு எழுதிய பதிலையும் இங்கே காணலாம் : நேரு மாமா அவர்களுக்கு, リr@5km)。 எல்லாச் சகோதர சகோதரிகளும் உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புகிருர்கள். என்னுடைய பிறந்த நாள் நவம்பர் 13-ல் வருவதால், அதை எவரும் கொண்டாட மாட்டேன் என்கிருர்கள். " நாளை க்கு உனக்குக் கட் டாய ம் மிட்டாய் கிடைக்கும். உன் பிறந்த நாளுக்கு எதற்கு மிட்டாய் ?” என்று கேட்கிருர்கள். மாமா, உங்கள் பிறந்த நாளை ஏன் ஒரு நாள் முன்பே (நவம்பர் 13-ல்) கொண்டாடக் கூடாது ? சிவசங்கர் 12—11—263. அன்புள்ள சிவசங்கருக்கு, நீ அனுப்பிய வாழ்த்துச் செய்தி கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி. உன்னுடைய இந்த அன்புக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம். புது டில்லி, ஜவாஹர்லால் நேரு 15—11—63.