பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்கக் குழந்தை ஒன்றும், ரஷ்யக் குழந் தை ஒன்றும் நேருவுக்கு எழுதிய கடிதங்கள் இங்கே இருக்கின்றன. நேரு படித்துப் பார்த்த அந்தக் கடிதங்களே, நீங்களும் படித்துப் பார்க்க வேண் அன்புள்ள நேருவுக்கு, நீங்கள் மிகவும் நல்லவர். உங்களுக்குக் கறுப்பு மனிதர், வெள்ளே மனிதர் எல்லோருமே ஒன்றுதான். நான் ஜூனியர் ஸ்கூலில் படிக்கிறேன். டெலிவிஷனில் கென்னடியுடன் உங்களை நான் பார்த்திருக்கிறேன். தலையில் வெள்ளைக் குல்லாயுடனும், நீள அங்கியுடனும் ஜம்' மென்று இருந்திர்கள். உங்களுக்கு எங்க ள் எல்லோருடைய குவியல் குவியலான வாழ்த்துக்களை இத்துடன் அனுப்புகிறேன். உங்கள் நல்வாழ்த்தை விரும்பும், ஜூலி, கலிபோர்னியா. நேரு மாமாவுக்கு, மாஸ்கோவிலிருக்கும் தான்யா எழுதிக்கொண்டது. நீங்கள் உலகத்தில் போர் ஏற்படாமல் செய்தீர்கள். சமாதானம் உண்டாக வழி காட்டினிர்கள். அதற்காக உலகத்தில் உள்ள எல்லோரும் உங்களுக்கு நன்றி செலுத்துகிருர்கள். உங்களால்தான் சமாதானம் என்ற கப்பல், அபாயகரமான பாறைகளில் மோதிவிடாமல் பத்திரமாகக் கரை சேர்ந்துவிட்டது. நான் இன்றுவரை நீங்கள் தந்த சிவப்பு ரோஜா வைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். நான் எப்போ தாவது இந்தியாவுக்கு வந்தால், கட்டாயம் உங்களைச் சந்திப்பேன். தான்யா, குழந்தைகளின் கண்ணிர் மாஸ்கோ. 1964, மே 27ஆம் தேதி நேரு மறைந்தார்