பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:றந்ததைக் கேட்டு உலகமே அழுதது. நாடுகளிலிருந்தும் நேருவின் மகள் இந்திரா காந்திக்கு அனுதாபக் கடிதங்கள் வந்து குவிந்தன. அவற்றில் பல, குழந்தைகள் எழுதிய கடிதங்கள். மாதிரிக்கு இதோ சில கடிதங்கள் : “ எனக்கு நேரு மாமாவை ரொம்பப் பிடிக்கும். அவர் மிக நல்ல மாமா. அவரை நான் மறக்கவே மாட்டேன்.” ' உங்களுக்கு அப்பா போய்விட்டார். இதைக் கேட்டதில் இருந்து எனக்குச் சாப்பாடு செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை ' " நான் நேரு மாமாவைப் பார்த்ததே இல்லை. சீக்கிரம் பார்க்கலாம் என்று நினைத்தேன். என் ஆசை இனி எப்படி நிறைவேறும் ?” காந்தித் தாத்தாவை நான் பார்த்ததில்லை. நேரு மாமாவையாவது பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப் பட்டேன். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.”

  • உங்களுடைய அப்பா எனக்குப் பிடித்தமானவர். எல்லோருக்கும் பிடித்தமானவர். அவர் மிகமிக நல்லவர், தயவு செய்து அழாதீர்கள். இல்லாவிட்டால் நானும் அழுவேன்.'

இப்படி உள்ளத்தை உருக்கும் எத்தனை எத்தனையோ கடிதங்கள். நேரு மறைந்ததைக் கேட்டதும், ஜப்பான் தேசத்துக் குழந்தைகள் மிகவும் வருத்தப்பட் டார்கள். ஜப்பான் தலை நகரான டோக்கியோவைச் சேர்ந்த சில குழந்தைகள் உடனே ஒன்று கூடி னுர்கள். நேராக மிருகக் காட்சிச் சாலைக்குச் சென் ருர்கள். அங்கே, அன்புப் பரிசாக அவர்களுக்கு நேரு அனுப்பி வைத்த யானே இருந்தது. அதைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டார்கள். சிறிது நேரம் மெளனமாக இருந்தார்கள். அப்போது அவர்கள்.கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.