பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமா வாழ்க! என்று வாழ்த்துகிறீர்கள். சில இடங்களில் குழந்தைகளுக்குப் பால் வழங்கு கிருர்கள் ; இனிப்புக் கொடுக்கிருர்கள். இன்னும் குழந்தைகளுக்கு வேண்டிய பல நல்ல காரியங் களைச் செய்கிருர்கள். இப்படி நாடு முழுவதும் விழாக்கள் நடக்கின்றன. நேரு குழந்தையாக இருந்தபோது ஆண்டு தோறும் நவம்பர் 14-ஆம் தேதியை அவருடைய வீட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அந்த விழாவில் அவர்தாம் கதாநாயகன். அன்று விடியற்காலையில் ஒரு பெரிய தராசின் ஒரு தட்டிலே நேருவை உட்கார வைப்பார்கள். மற்ருெரு தட்டில், அவரது எடை அளவு கோதுமை முதலிய தானியங்களே வைத்து நிறுப்பார்கள். பிறகு, அந்தத் தானியங்களே ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். அன்று அவருக்குப் புதுப்புது ஆடைகள் உடுத்தி அழகு பார்ப்பார்கள். உறவின ரெல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஏராளமான பரிசுகள் கொடுப்பார்கள். பகல் விருந்து பலமா யிருக்கும். அன்று முழுவதும். அவருக்கு ஒரே குது கலந்தான். இரவு துரங்கப் போகும்போது, ஐயோ, இந்த விழா ஆண்டுக்கு ஒரு முறைதானே வரு கிறது? அடிக்கடி வரக்கூடாதா?’ என்று அவர் வருந்துவாராம். - சிறுவராயிருந்தபோது, அவருடைய வீட்டிலே, உறவினர்களெல்லோரும் சேர்ந்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர்கள். நாள் ஆகஆக, அவருக்கு இந்த நாடே வீடாகியது. நாட்டு மக்கள் எல்லோருமே உறவினர்கள் ஆளுர்கள். அப்புறமும், வீட்டுக்குள்ளேயே அவரது பிறந்த