பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–12–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

|

இதழ் 23

அறிஞர் அம்பேத்கார்.

மலர் ே சேலம் 14-12-56

幻 * *

சமுதாயப் புரட்சிவீரர் தலைசிறந்த பகுத்தறி வாளர்; தாழ்த்தப்பட்டோரின் தனிப் பெருந் தலைவர் அறிஞர் அம்பேத்கார் அவர்கள் 6-12-56 காலே யில், புதுடெல்லியில் மரணமடைந்தார். செய் யறிந்த நாம் திடுக்கிட்டோம்; திகைத்தோம்; செய லற்று-நினைவற்று கின்ருேம்.

அறிஞர் அம்பேத்காரின் மறைவு பகுத்தறி வாளர்களுக்குப் பெரும் இழப்பு:ஈடுசெய்ய முடியா கட்டம். அவர் ஐந்துகோடி ஆதித்திராவிட மக்க எளின் தலைவராக மட்டுமில்லை: தன்ம்ானம், தன்னு ணர்வு, பகுத்தறிவு பூர்வமான சமுதாய முன்னேற் றும் நாடுகின்ற பலகோடி மக்களின் மதிப்பினைப் பெற்ற மாபெரும் தலைவராக விளங்கினர்.

அவரது எதிர்பாராத மரணத்தில்-இரவுபடுக் கச் சென்றவர் படுக்கையிலேயே இறந்துகிடந்த சேர்க நிகழ்ச்சியில்-மர்மம் இருக்குமென சிலர் ஐயுறுகின்றனர். அது ஆய்வுக்குரிய ஒன்று.

எனினும் இறந்தவர் பிழைத்தெழுந்து நம்முடன் நடமாடப் போவதில்லை; நாட்டின் பலவகைப் பிரச் சினைகளிலே வழிகாட்டியாக நல்லுரை வழங்கப் போவதில்லை. எதிர்ப்புக்கஞ்சாது கொள்கை முழக்க மிடும் அந்தக் கோமகன இனி நாம் காணப்போவ தில்லை. அம் மேதையின் அரிய உழைப்பும்; எழுத் தும், பேச்சுமான நூல்களும்ே இனி கம்க்கு வழிகாட் (BLiഞ്ഞഖ.

இந்துதர்மம், இந்துமதம் என்று கூறப்படுகின்ற இனவெறித் கோட்பாடுகளின் ు ஆரியம் வளருத்த தீண்டரமைத் தொழுநோயைப் போக்கிட அறிஞர் அம்பேத்கார் ஆற்றிய பணிகள் என்றும்

§

மக்க

எவராலும் மறக்க முடியாதவை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றிலே இடம்பெறத் தக்கவை.

தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினையில் காந்தியா ரின்-காங்கிரஸ்காரர்களின் கண்துடைப்பு &&ు களே ஆதியிலிருந்தே எதிர்த்துவந்தவர். மத ஒழிப்பு,

சாதி ஒழிப்பு, சாஸ்திர-புராண-இதிகாசப் புரட்டு

கள் ஒழிப்பு ஆகியன நிகழ்ந்தாலொழிய தீண்டருமை ஒழியிாதென்பதை ஆணித்தரமாக விளக்கிய வீரர்.

இந்துமதக் கொடுமைக்கு ஆற்ருது மனம் நொந்து "நான் இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாக றக்கமாட்டேன்" என்ருர், அவ்வாறே தன் மனைவி ளோடு, சுமார் 3 லட்சம் தாழ்த்தப்பட்ட மக் களே அழைத்துக்கொண்டு, இந்துமதத்தை உதறி விட்டு புத்த நெறியாளராக மாறிஞர் சென்ற திங் கள். பவுத்தராகவே இறந்தார். இறந்து சவ அடக் கத்தின் சம்யத்திலே 50 ஆயிரம் பேரை புத்தநெறி க்கு ஈர்த்துள்ளார். அம்பேத்காரின் பேச்சும், எழுத் தும் அறிவியல்-அனுபவ பூர்வமானவை; புகுத்த றிவு மணக்கும் பண்போவியங்கள்; சமுதாயப் புரட் சிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்.

அவர் சிறந்த சட்டநிபுணர்; இந்திய அரசிய லேை Fi உருவாக்கிய சிற்பி இணை யற்ற சிந்தனையாளர்; டாக்டர் லட்சுமி என்ற பார்ப் பன மாதைக் கலப்புமணம் புரிந்துகொண்டு, சபிதா தேவியாக்கி புத்தநெறியை மேற்கொண்ட புனிதர் உலகமேதை அவரது வாழ்வும், வாக்கும் மதத்தால், அரசியலால், பழமைப் பற்றுக் கோடுகளால் அடி

த மைப் பட்டுக்கிடக்கும் கோடிக்கணக்கான அழுத்தப்

பட்ட மக்களுக்கு அறிவொளி நல்கவேண்டும்! வாழ் விலே புதுமைபெற வேண்டும்!

அறிஞர் அம்பேத்கார் மறைந்துவிட்டார். கண் கலங்குகிருேம்; அனுதாபம் தெரிவிக்கிருேம்; இத் தோடு கின்று விடாமல், அவரது சமுதாயப்புரட்சிக் கருத்துக்களை ஏற்போம்; சாதிமத பேதமற்ற பகுத் தறிவு பூர்வமான சமதர்ம சமுதாயத்தை அமைப் போம் வாரீர்!

→一農顯。 கண்ணன்,

தில்ல் வள்ளுவர் நாடக மன்றம் சென்னையில் நடத்தப்போகும் அழகுதமிழ் நாடகம். கன்னி யின் சபதம். கதை, வசனம்: ப. கன்னன். விரைவில் எதிர்பாருங்கள்.

கோவில். சு. இராசன்,

9 பக:ளர் YeMMeeMeeBMMMMMMM MMMMS MMMMMM MMMMMMMMM MMMMY

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/206&oldid=691644" இலிருந்து மீள்விக்கப்பட்டது