பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

விமான வழிகள்

பசிபிக்கின் குறுக்காகச் செல்லும் விமான வழிகள் மிகக் குறைவே. அமெரிக்க விமானங்கள் சான்பிரான்ஸிஸ்கோ, லாஸ் ஏஞ்சல் ஆகிய பகுதிகளில் இருந்து ஹோனலுலு வழியாக வேக் தீவிற்கும்; பின் டோக்கியோவிற்கும் அல்லது காம் (Guam), மணிலா வழியாகச் செய்கோன், சிங்கப்பூர் செல்கின்றன.

மற்றொரு விமான வழி, ஹோனலுலு, கேண்டன் தீவு, பீஜி வழியாகச் சிட்னி அல்லது அக்லாந்திற்குச் செல்கிறது. ‘காண்டாஸ் எம்பயர் ஏர்வேஸ்’ நியூயார்க்கிலிருந்து ஹோனலுலு, சான்பிரான்ஸிஸ்கோ வழியாகச் சிட்னியுடன் தொடர்பு கொள்கின்றன.

பி. ஒ. ஏ. சியின் உலகைச் சுற்றும் வழி இலண்டன், நியூயார்க், சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களின் வாயிலாக அமைந்துள்ளது. பின் அது பசிபிக்கின் குறுக்காக ஹோனலுலு வழியாக டோக்கியோவிற்குச் செல்கிறது. திரும்பவும் இலண்டனுக்குத் தொலை கிழக்கு வழியாக வருகிறது.