பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மெலானீசியா அல்லது கறுப்பர் தீவுகள்: இவை ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே உள்ளவை. நியூகினியா சாலமோன் தீவுகள் முதலியவை இவற்றில் அடங்கும்.

பாலினீசியா அல்லது பல தீவுகள்: இவை பசிபிக் கடலில் சிதறி அமைந்துள்ள தீவுகள்; எரிமலை அல்லது பவழத்தால் ஆனவை. குக்தீவுகள், ஹாவாய், டியுபாய்த் தீவுகள் இவற்றில்

அடங்கும்.

அரசியல் பிரிவுகள்

பசிபிக் தீவுகளில் பீஜி, சாலமோன், கில்பர்ட் முதலிய தீவுகள் பிரிட்டனுக்குரியவை.

கூட்டத் தீவுகள் (Society Islands), லாயல்டி தீவுகள் முதலியவை பிரான்சுக்கு உரியவை.

மார்ஷல் தீவுகள், பொகையன் வில்லித் தீவு முதலியவை ஜெர்மன் ஆட்சிக்கு உட்பட்டவை.

ஹாவாய், சாமோ முதலிய தீவுகள் அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்டவை.

பசிபிக் தீவுத் தொகுதிகளில் பீஜித் தீவுகள், ஹாவாய் ஆகியவற்றைப்பற்றி இனிவரும் இயல்களில் காண்போம்.