பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

முதலியனவும் இவர்களது உணவுத் திட்டத்தில் இடம் பெறுகின்றன. இவர்கள் சாப்பிடுவதில் கைதேர்ந்தவர்கள்!

ஆடவர் ‘சுறு’ என்னும் குட்டையான உடையை அணிவர். பெண்டிர் ‘மதர் ஹப்பார்டு’ என்னும் நீண்ட உடையயை அணிவர். சங்கு, எலும்பு, பன்றியின் பல் ஆகியவற்றைக் கொண்டு செய்த நகைகளை இவர்கள் பயன்படுத்துவர். பொதுவாகப் பீஜியர்கள் சோம்பேறிகள்.

விளைபொருள்கள்.

பீஜியின் சிறந்த விளைபொருள் சர்க்கரை இங்குத் தங்கம், நிக்கல், துத்தநாகம் முதலிய உலோகங்கள் கிடைக்கின்றன. இங்கிருந்து தேங்காய் எண்ணெய், மங்கனீசுத்தாது, பழுப்புச்சக்கரை, அன்னாசிப்பழம் ஆகிய பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன.

இந்தியர் வேளாண்மைத் துறையில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் கரும்பு பயிரிடுகின்றனர்.

மொழி

இங்கு இரு ஆட்சிமொழிகள் உள்ளன. ஒன்று ஆங்கிலம். மற்றொன்று பீஜியத்தொன் மொழியான ‘பௌ அன்’. இந்தியர் இந்திமொழி பேசுவர். இம் மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இம்மூன்று மொழிகளிலும்