பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. புதிய கண்டுபிடிப்புகள்

குரிலிசிற்கு (Kuries) அருகே, பசிபிக் கடலில் வடமேற்கே மூடுபனியும் புயலும் நிலவும் பகுதியில் சோவியத்து விட்யாஸ் கப்பல் ஆராய்ச்சி நடத்தியது. கடலின்கண் உயிர்ப்பரவலில் உள்ள ஒழுங்கினைக் கண்டறிய இவ்வாராய்ச்சி நடைபெற்றது. கடலின் மேற்பரப்பிலிருந்து கீழ் 9 கி. மீ. அளவுக்கு மேலும் ஆராய்ச்சி நடைபெற்றது. இவ்வாராய்ச்சியினால் வெளியாகியுள்ள உண்மைகளாவன:

1)
இக்கடலின் ஆழங்களில் வியத்தகு விலங்குலகம் உள்ளது. இது முழுக்க முழுக்க இருண்டது, குளிர்ச்சி மிக்கது. இங்கு உணவு அருகிக் காணப்படுகிறது.
2)
1000 காற்று வெளி அளவுக்கு அழுத்தம். உள்ளது.
3)
நாம் நினைத்ததற்கு மாறாக 8,000 மீட்டர் ஆழத்திலும் உயிர்கள் வாழ்கின்றன.
4)
படிவுகள் தோன்றல், வேதிப் பொருள் இடமாற்றம் அடைதல் ஆகிய நிகழ்ச்சிகளில் ஆழ்கடல் விலங்குகளுக்குச் சிறந்த பங்குண்டு.
5)
வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் வாழ, இந்த ஆழ்கடல் உயிர்கள் தகைவாற்றல் பெற்றுள்ளன.
6)
இவ்வராய்ச்சியினால் சில விலங்குகள் தோன்றிய முறையினை அறிய மிகப் பயனுள்ள செயதிகள் கிடைத்துள்ளன.