பக்கம்:பசி கோவிந்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பசி கோவிந்தம்

போலிருக்கிறது; அவர்களுக்குப் பின்னுல் ஒரு நாயனு ராவது வந்து சேர்ந்து, அந்த அறுபத்து மூன்றை அறுபத்து கான்காகக்கூட ஆக்காமலிருப்பதே எங்களை என்னவோ செய்கிறது-கடவுளுக்கே இந்தக் கதி என்ருல் எங்கள் கதி என்ன?-கைவிடாதே, கடவுளேக் கைவிட்டாலும் எங்களைக் கைவிடாதே!-ஊஹல்ம்; கடவுளேக் கைவிடாமல் இருந்தால்தான் எங்களையும் நீ கைவிடாமல் இருக்க முடியும்-முயற்சி செய்; குழந்தையாயிருக்கும்போது கடவுளே நினைக்க முடியாவிட்டால் யெளவனத்திலாவது நினைக்க முயற்சி செய்! யெளவனத்தில் நினைக்க முடியா விட்டால் விருத்தாப்பியத்திலாவது கினைக்க முயற்சி

செய்!

அப்பொழுதுதான் கோயிலுக்கும் குருக்களுக்கும், தர்ப்பைக்கும் தட்சணைக்கும், தேருக்கும் திருவிழாவுக் கும் வேலே இருக்கும். இல்லையென்ருல் காங்கள் காட்டும் மோட்சத்தை நீங்கள் அடைவதற்கு முன்னுல் காங்களே அடைந்துவிட வேண்டியதுதான்!

8

அப்பனே! - எனக்குத் தெரியும், மகனே! என்று அழைக்கும்போது, நீ யாரடா எனக்கு அப்பணு யிருக்க?’ என்று நீ கேட்பாய் என்று எனக்குத் தெரியும்-அதனுல்தான் எட்டாவது பாட்டுக்குரிய வியாகரணத்தை அப்பனே!’ என்று ஆரம்பித்திருக் கிறேன்-பிழை பொறுத்தருள்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/24&oldid=590888" இலிருந்து மீள்விக்கப்பட்டது