பக்கம்:பச்சைக்கனவு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மேக ரேகை

தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதயசூரியனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

இருசாரியிலும் சப்தவர்ணங்கள் விதவிதமாய்க் குவிந்து வழிந்தன. நீலக்குன்றுத்தொடர் வானை அளாவியது. நீலக்குன்றுகள் மேல் மஞ்சள் மேகங்கள் தவழ்ந்தன. பிஞ்சும் பூவுமாய்ப் பச்சைப் பயிர், சுற்றிப்பொங்கியது. நான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைத் தீட்டி, பாம்பின் சொரே'லுடன் சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணாடியென இளம் வெய்யிலில் பளபளத்தது. ஊதா வானில் நீலக்குன்றுகள் மேல் தவழும் மஞ்சள் மேகங்களி னின்று வெள்ளி ஜரிகைகள் நாடாநாடாவாய்த் தொங்கின. பச்சைப்பயிரில் காய்கனிகளில் உற்ற சிவப்பும் செந்துாரமும் பருவப்பெண்ணின் வெட்கம்போல் மிளிர்ந்தன.

தூய பொன்னிறத்துடன் பிறந்து கொண்டிருக்கும் உதயசூரியனை நோக்கி நான் முன்னேறிக் கொண் டிருந்தேன்.

என்னைச் சூழ்ந்த இயற்கையின் உவகை என்னுள் புகுந்ததும் அதன் களிவெறி என்னின்று சிரிப்பாய்ப் பீறிட்டது. அதன் ஒலி ஆகாய வெளியில் மோதி நrத்திரம் போல் உதிர்ந்தது. என் சிரிப்பினின்று உதிர்ந்த அக்கரு முத்தைக் குனிந்து பொறுக்கி, உவகை வெறியில், உயர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/123&oldid=590781" இலிருந்து மீள்விக்கப்பட்டது