பக்கம்:பச்சைக்கனவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கனவு O 11

போட்டாலும் காது கேட்காது. அவள் பண்ணின பாவம் ஏக பாப ஜன்மங்கள்!

அப்பாவுக்கு சம்பந்திமேல் குரோதம் பிறந்துவிட்டது. தன் அவசரத்துக்குத் தகுந்தாப்போல், தன்னை சம்பந்தி ஏமாற்றி விட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். சீர்வரிசையெல்லாம் அப்படியே திருப்பினார். பெண்ணோ, பெண்வீட்டாரோ தன் வாசல்படி மிதிக்கக்கூடாது என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். எங்கப்பா முரடு. கிராமத் துக்குப் பெரிய மனுஷன் என்றும் பெயர். அப்புறம் கேட்பானேன்:

எனக்கென்ன அப்போ தெரியும்? அப்பா எனக்கு மறுமணம் செய்வதாய்க்கூட யோசித்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் என் கண்ணை அவித்துக்கொண்டது, அவர் மூக்கை அறுத்தாற்போலாயிற்று.

என் மாமனாருக்கும் சந்தோஷந்தானோ என்னவோ, 'வேனும் அந்தப் பயலுக்கு. குருட்டு மாப்பிள்ளைக்கு ஊமைப் பெண் குறைந்து போயிற்றா?' என்று பதட்ட மாய் பேசிவிட்டார். இரு குடும்பங்களுக்குமிடையில் வைரம் முற்றிற்று.

நான்குருடர்களின் உலகம் குறுகிவிடுகிறது. நினைத்தவிடம் போகமுடியுமா, வரமுடியுமா, நாலுபேருடன் இஷ்டப் பிரகாரம் சேரமுடியுமா? எல்லோரும் எவ்வளவோ பிரியமாய் இருந்த போதிலும், அவர்களின் இரக்கம் ஏளனமாய்த்தான் படுகிறது அவர்களுக்கிருப்பது எனக் கிருக்கிறதா?

ஆகவே, எப்பவும் நான் தன்னந்தனியன்தான். நான் வீட்டிலில்லாத வேளையில், வேலையில்லாத வேளையிலும், குளக்கரையில் உட்கார்ந்துகொண்டு கல்லை ஜலத்தில் விட்டெறிந்து கொண்டிருப்பேன். அதுதான் என் வீட்டுக்குக் கிட்ட, அங்கு ஒருவரும் வருவதில்லை. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/20&oldid=590676" இலிருந்து மீள்விக்கப்பட்டது