பக்கம்:பச்சைக்கனவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ví

எனக்கு நினைவு மூட்டிக்கொள்ளும் சைகையில், மேடையி, லிருந்து சபையோரைச் சுட்டிக் காட்டுகிறேன். உடனே அங்கிருந்து ஆயிரமாயிரம் விரல்கள் எழுந்து என்னைச் சுட்டிக் க்ாட்டுகின்றன. என்னைச் சுற்றி வியப்புடன் நோக்குகிறேன். என்னுடன் மேடையில் அத்தனை நடிகருக்கும் அதே முகம்! பின்மண்டையில் அறைந்தாற்போல் எனக்கு அடையாளம் உதயமாகிறது. அவ்வளவுதான் நான் ஆனந்தக் கூத்தனாகிவிட்டேன். திமிதிமியென்று மேடையதிரக் குதிக்கிறேன். - என்மேல் சாணியும், பூவும், பொரியும், அழுகல் பழமும் வெள்ளியும் பொன்னும் மாரிபெய்கின்றன. என் தலைமேல் உடைந்த முட்டை என் முகத்தில் ஒழுகலை நக்குகிறேன். பழத்தோல் வழுக்கி விழுந்து சிரிப்புத் தாங்க முடியாது அர்ங்கத்தில் உருள்கிறேன். நான் ஆனந்தக் கூத்தாடிவிட்டேன். இனி எனக்குப் பயமில்ல்ை; சபைக்கோழையில்லை. குழப்பமில்லை. முக்ம் கண்டுகொண்டுவிட்டேன்.

இக்கதைகள், ஏறக்குறைய பதினைந்து வருடக் கனவுகள்; கடிவாளம் மறுத்த ஆரம்ப சீற்றங்கள்; வத்தியின் இருநுனி களும் பற்றியெரியும் அக்னி கோபங்கள், ஜ்வாலை முகங்கள்; ஆசைக் கனவுகள்; தீய்ந்த கருகல்கள்; பச்சை மரம் வடித்த ரத்தங்கள்; பட்டமரத்தில் வடிந்த பால்கள்; உயிரோடு புதைத்துவிட்ட உயிர்கள்; சமாதிமேல் நட்ட செடிகள்; புதைத்த உயிர் வீசும் பூமணங்கள்அடுக்க அடுக்க யவில்லை, அலுக்கவில்லை; இது திரெளபதியின் அே இ! இடுப்புச் சீலையைப் பிடித்த கை உயரத்துக்கி விட்டபின் வர்ண வர்ணமாய் வானம்வரை குவிந்து காக்கப்பட்ட Alf)fT%ßf Lß

-என்று நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் நினைத்துக் கொண்டதுதான் என்று இப்போது தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/7&oldid=590661" இலிருந்து மீள்விக்கப்பட்டது