உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரப் பஞ்சாயத்து தேர்தல் விதிகள் 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தின் 14-வது பிரிவில் அளித்துள்ள அதிகாரங்களேக் கொண்டு, அரசாங்கம் அடியில் கண்ட விதிகளைச் செய்திருக்கிறது. (' 14-வது பிரிவு : பஞ்சாயத்தின் அங்கத்தினர்கள், இதற்கென வகுக்கப்பெற்ற விதமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.'; - நகரப் பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தல் பற்றி 1964-ம் ஆண்டு விதிகள். 1. சுருக்கமான பெயர் இந்த விதிகள், நகரப் பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தல் நடத்துவது பற்றிய 1964-ம் ஆண்டு விதிகள் என்று சொல்லப்படும். 2. சொற்களுககு விளக்கம் இந்த விதிகளிலே, சந்தர்ப்பம் வேறு அர்த்தம் குறிப் பிட்டால் ஒழிய, மற்றபடி சில விளக்கங்கள் : (அ) மேற்படி சட்டம்’ என்பது 1958-ம் ஆண்டு சென்னே பஞ்சாயத்துச் சட்டம் என்று பெயர். - (ஆ) வாக்குச் சீட்டுப் பெட்டி’ என்பதில் வாக் காளர்கள், வாக்குச் சீட்டைப் போடுவதற்காகப் பயன் படுத்தும் ஒரு பெட்டி, பை, அல்லது கொள்கலம் என்பதும் அடங்கும். இ) போட்டியிடும் அபேட்சகர் ’’ என்பது, 11-வது விதியின்படி நியமனம் ஏற்றுக்கொள்ளப் பெற்றிருப்பவரும் அபேட்சகராயிருப்பதிலிருந்தும் விலகிக்கொள்ளாதவருமான ஒரு அபேட்சகர் என்பதைக் குறிக்கும். (ஈ) ஒரு நபரின் வாக்காளர் பட்டியல் எண் ’’ என்பது: (1) வாக்காளர் பட்டியலில் அந்த நபர் சம்பந்த