உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2; (2) இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு மேற்படி கிராமம் அல்லது பட்டணத்தின் நிர்வாகம் அந்த பஞ்சாயத்தைச் சேரும். ஆனல், இந்தச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின்படியோ வெளிப்படையாக அளிக்கப்பட்ட அலுவலச் செய்யும் அதிகாரம் இந்தப் பஞ்சாயத்துக்கோ, அதன் தலைவருக்கோ, அல்லது நிர்வாக அதிகாரிக்கோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கோ கிடையாது. (3) ஒவ்வொரு பஞ்சாயத்தும் 3-வது பிரிவின்படி வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கிராமத்தின் பெயராலோ அல்லது பட்டணத்தின் பெயராலோ சட்டப்படி உண்டான ஒரு சபையாக இருக்க வேண்டும். இந்தச் சபையானது அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்ருக வந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவான ஒரு முத்திரை கொண்டதாக இருக்க வேண்டும். இச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்தச் சட்டத் தின்படியோ ஏற்படுத்தப்படும் கட்டுபாடுகளுக்கும்வரையறை களுக்கும் உட்பட்டு சட்டப்படி தனது பெயரால் வழக்குத் தொடர யோக்கியதை உள்ளதாக இருக்க வேண்டும். பிறர் இதன் மீது வழக்குத் தொடுக்கப் பெறவும் யோக்கியதை பெற்றதாக இருக்க வேண்டும். தனது பெயரால் ஸ்தாவர் சங்கம சொத்துகள் வாங்கவும், வைத்திருக்கவும், ஒப்பந் தங்கள் செய்து கொள்ளவும் பிறருக்கு மாற்றிக் கொடுக்கவும் பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும். எந்தக் காரியங் களுக்காக இந்தச் சபை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ அந்தக் காரியங்களுக்கு அவசியமான, த கு தி ய ர ன, உசிதமான எல்லாக் காரியங்களையும் செய்யும் யோக்கியதை உள்ளதாக இருக்கும் இந்தச் சபை. 9. கிராமம் என்றும் பட்டணம் என்றும் தரம் பிரித்திருப்பதை மாற்றுதல் (1) பிரிவு 3. உட்பிரிவு (1)ன்படி வெளியிடப்பட்ட அறிவிப்பை ஒட்டி, பாகுபாடு செய்யப் பெற்ற ஒரு கிராமமோ அல்லது பட்டணமோ அந்த உப-பிரிவில் குறிப்பிட்ட நிபந் தனேக்கு ஏற்ப இல்லாவிட்டால், அவ்வாறு பாகுபாடு செய்ததை அரசாங்கம் மாற்றி அமைக்கலாம். (2) அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து, எந்த நீதி மன்றத்திலும் வழக்காட முடியாது.