உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 49. லைசென்ஸ், அனுமதியின் கால அளவு (ப. ச. 159, (3)) விதி ஏதாவது ஒரு லேசென்ஸ், அல்லது அனுமதி கொடுக்கும் படி, அல்லது புதுப்பிக்கும்படி சட்டத்தின் அல்லது ஏதே னும் விதியின் அல்லது துணைவிதியின், அல்லது ஒழுங்கு முறையின்கீழ் செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பத்தின்மீது உ த் த ர வு பிறப்பிப்பதற்குமுன், மாவட்டச் சுகாதார அதிகாரி, அல்லது தொழிற்சாலே இன்ஸ்பெக்டர் போன்ற வெளி அதிகாரி, அல்லது வேறு யாராவது ஒரு அலுவலர் ஆலோசிக்கப்பட வேண்டியிருந்தால், அந்த விண்ணப்பத் தின்மேல் பிறப்பிக்கும் உத்தரவை அந்த விண்ணப்பதார ருக்கு, பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மேற்படி விண்ணப் ப்த்தைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து, அறுபது நாட் களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும். 50. குத்தகைக்காரர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் வரி வஜா செய்தல் fu. gr. 178. (2) xviii விதிகள் 1. பஞ்சாயத்துகளின் குத்தகைக்காரர்கள் அனே வரும், பஞ்சாயத்துகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நபர்கள் அனேவரும் தங்கள் குத்தகை அல்லது ஒப்பந்தத்தின் பிரிவுகளேக் கட்டாயமாக அனுசரிக்க வேண்டும். 2, 3-வது விதிகளின் பிரிவுகளே அனுசரித்தால்ன்றி அவர்களுக்கு வரி வஜா வழங்கப்படமாட்டாது. 2. அடியிற்கண்ட வரையறைகளுக்கும், மேல்விசா ரணேக்கும் உட்பட்டு குத்தகைக்காரர்களுக்கும் ஒப்பந்தக் காரர்களுக்கும் வரி வஜா வழங்க வேண்டும் : (a) எதிர்பார்க்க முடியாத அசாதாரண நிகழ்ச்சி யில்ை, குததகைககாரா, அல்லது ஒப்பந்தக்காரர். தமது குத்தகை, அல்லது ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விஷயங்களில் வரி வஜா வழங்க வேண்டும். உதாரணம் :