3}6 82. அப்பீல் செய்துகொள்வதற்கான கால அளவு [ւյ. գ. 178. (2) (41)] விதி பஞ்சாயத்துச் சட்டத்தில் அல்லது அதன்கீழ் செய்யப் பட்ட விதிகளில் வேறு விதமாய், வெளிப்படையாக ஏற்பாடு செய்திருந்தாலொழிய, அந்தச் சட்டத்தின்படி அல்லது அத்தகைய ஒரு விதியின்படிக்கான அப்பீல் ஒவ்வொன்றும், 1908-ம் ஆண்டு, இந்திய கால வரையறைச் சட்டத்தின் 5-வது பிரிவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, அடியிற் கண்ட வாறு கலெக்டருக்குச் செய்துகொள்ளப்பட வேண்டும் : (a) லேசென்ஸ் அல்லது அனுமதி அளிக்கிற உத்தர வின்மேல் அப்பீல் செய்துகொள்வதானுல், அந்த உத்தரவு பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் விளம்பரப் பலகையில் வெளியிடப்பட்ட தேதிக்குப் பிறகு முப்பது நாட்களுக்குள் செய்துகொள்ள வேண்டும். (b) மற்ற விஷயங்களில், எந்த உத்தரவின் மேல் அல்லது நடவடிக்கையின்மேல் அப்பில் செய்து கொள்ளப் படுகிறதோ அந்த உத்தரவு அல்லது நடவடிக்கை வந்து சேர்ந்த தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். 88. இயந்திர சாதனம் நிறுவ அனுமதி தேவை இல்லாதவை (ப.ச. 1.12) விதிகள் அடியிற்கண்ட யந்திரங்கள், பஞ்சாயத்துச் சட்டத்தின் 112-வது பிரிவில் கண்ட பிரிவுகளினின்றும் வில்க்குப் பெறும் ; அவையாவன : (1) வீட்டுக் காரியங்களுக்காக அல்லது சொந்தக் காரியங்களுக்கு அல்லது வசதிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தேசித்துள்ள மின்சாரக் கருவிகளும், மின்சார யந்திரங் களும்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/802
Appearance