பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 தொழிற் பட்டறைப் பிரிவு கிராமக் கைவினேஞர்களுக்கு சீரமைத்த விவசாயக் கருவிகளையும், சாதனங்களையும் தயாரிப்பது, செப்பனிடுவது ஆகியவற்றிற்காக கொல்லர் தொழிலிலும், தச்சுத் தொழிலி லும் பயிற்சி அளிக்கும் பொருட்டு இரண்டு பட்டறைப் பிரிவு கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தே. கல்லுப்பட்டியிலும், பவானிசாகரிலும் உள்ள கிராம வளர்ச்சிப் பயிற்சி நிலேயங் களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 20 கிராமக் கைவினைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிரு.ர்கள். பயிற்சிக் காலம் 12 மாதங்களுக்கு நீடிக்கிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றவுடன் மேற்படி வினைஞர் தங்களுடைய சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று சொந்தத்தில் பட்டறை நிறுவிப் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க் கப்படுகிறர்கள்; கைவினைஞர்களுக்குக் கடன்கள் கொடுத்து தவனேகளில் வசூலிக்கிருர்கள். பயிற்சிக்கால அளவில் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 45 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. திருப்பதியில், வளர்ச்சி அலுவலர்களுக்குக் கூட்டுறவு முறையில் பயிற்சி உணவு-விவசாய அமைச்சகமும் ரிசர்வ் பாங்கும் ஒன்று சேர்ந்து இந்தியா முழுவதிலும் எட்டு கூட்டுறவுப் பயிற்சி நிலையங்களே நிறுவி உள்ளார்கள். இவற்றில் வட்டார வளர்ச்சி அலுவல்கள் (கூட்டுறவு) பயிற்சி அளிக்கப்படு கிருர்கள். திருப்பதியில் ஒரு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அங்கு இந்த ராஜ்யத்திலுள்ள வளர்ச்சி அலுவலர்கள் (கூட்டுறவு) வசதியான தொகுதிகளாக, பயிற்சி பெற அனுப்பப்படுகிருர்கள், பயிற்சிக் காலம் 3; மாதங்கள் வரை நீடிக்கிறது. சுகாதார அதிகாரிகளுக்குப் பயிற்சி சுகாதார அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக பூவிருந்தவல்லியில் ஒரு மறு பயிற்சி நிலேயம் நிறுவப்பட் டுள்ளது. எட்டு வாரங்களுக்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு டாக்டர், ஒரு சுகாதாரப் பார்வையாளர், ஒரு சுகாதார இன்ஸ்பெக்டர், பேறுகால உதவியாளர்கள் இருவர் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவினர் பயிற்சி பெற அனுப் பப்படுகின்றனர். இந்தப்பயிற்சி நிலையம் சுகாதார அமைச்ச கத்தால் நடத்தப்படுகிறது. HΗ23