பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


மூப்பனாரும்வாங்கியமரியாதைக்காக,நாலுபக்கத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, கல்லாப் பெட்டியின் மீது பத்திரிகையை வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியாரைப் பார்த்து, “அண்ணாச்சி! அப்படின்னா, நீங்க கைலாச முதலியார்வாள் வந்ததும் ஒரு வார்த்தை கலந்துக்கிட்டு, ஊர்க்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று ஒரு நெசவாளிகேட்டுக்கொண்டார்.

"செய்தாப்போச்சி, அத்தோடே இன்னொரு சங்கதி

"அதென்ன அது?"

'கோயில் தர்மகர்த்தா விஷயம்தான். கோயில் தர்மகர்த்தாபதவியைநாம்ஏதோமைனர்வாளுக்கேகிரயம் பண்ணிக் குடுத்த மாதிரி, அவாள் நடத்துக்கிடுதாக. அதுக்கும் ஒருவழிபண்ணியாகணும்" என்றார் வடிவேலு.

"அப்படின்னா ?"

தர்மகர்த்தாவைப் பத்தித்தான் பேரிலே நாலுபேரு நாலு விதமாகச் சொல்லுதாகளே. வருஷமும் நாலு ஆச்சி. அம்மனுக்கு ஒரு கொடையைக் காணம்; ஊரிலே பலபேர் குடுமி அவர் கைக்குள்ளே இருக்கதாலே, யாரும் அவரைத் தட்டிக்கேக்கவும்காணம்; ஊர்ப்பணத்துக்கும் இன்னிக்கித் தேதிவரையிலே ஒரு கணக்கு. வழக்குக் கிடையாது அதனாலே, வேறே யாரையாவது......"

வடிவேலு முதலியார் பட்டவர்த்தனமாக. விட்டுச் சொல்வதைக் கண்டதும், பக்கத்தில் மைனர் முதலியாருக்கு மிகவும் வேண்டியவரான சுப்பையா முதலியார் இருப்பதைச் சாடைகாட்டி, வடிவேலு முதலியாரின் தொடையில் லேசாகக் கிள்ளினார். ஒரு நெசவாளி, வடிவேலு முதலியாரோ அதற்கெல்லாம் மசிபவராயில்லை.

"எல்லாம் தெரிஞ்சிதான்'வே சொல்லுதேன்" என்று அடித்துப் பேசியவாறே இடத்தைவிட்டு எழுந்திருந்தார் வடிவேலு. பிறகு கடைக்கார மூப்பனாரைப் பார்த்து,