பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 3
அடுத்துக் கெடுத்தல்
1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்


இருள் குடிகொண்டது என்று சொல்லும்படியான ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் ஆலமரத்தில் மேகவண்ணன் என்ற பெயருடைய காகம் ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் உள்ள காகங்களுக்கெல்லாம் அதுதான் அரசனாக விளங்கியது. மேகவண்ணன் தன் அமைச்சர்களோடும், மற்ற காகங்களோடும் அந்த ஆலமரத்தில் நெடுநாள் இருந்து வந்தது.

பக்கத்தில் இருந்த ஒரு குகையில் கோட்டான்களின் கூட்டம் ஒன்று குடிகொண்டிருந்தது. அந்தக்கோட்டான்களின் அரசனும், தன் அமைச்சர்களோ