பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குயவன் சேனாதிபதி யானான்

185



லிருந்து சிதறிய ஒடு கிழித்தகாயம் இது?’ என்று அறிவில்லாமல் அந்தக் குயவன் உண்மையைக் கூறி விட்டான் .

" கேவலம் நீ ஒரு குயவனா? உன்னையா நான் என் சேனாபதியாக்கி என்னருகில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். மற்ற அரசர்களுக்குத் தெரிந்தால் இதைச் சுட்டிக்காட்டியே என்னைப்

பழித்துப் பேசுவார்கள். நீ இன்னார் என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே இந்த இடத்தை விட்டுப் போய்விடு" என்று சீறினான் அந்தச் சாதி வெறி பிடித்த அரசன்.

‘அரசே, நான் குயவனாக இருந்தாலும்' போர்த்தொழிலில் தாழ்ந்தவன் அல்ல. போரில் ப-12