பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

பஞ்ச தந்திரக் கதைகள்

இடத்தை நோக்கி நடந்தது. அப்போது, அந்தக் கொடிய வேடன் அங்கு வந்து சேர்ந்து விட்டான். வேடனைக் கண்டவுடன் மான் குட்டி துள்ளி ஓடியது. எலி அங்கிருந்த வளைக்குள் ஓடி மறைந்து கொண்டது. ஆமையால்தான் வேகமாக நடக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. மானைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த வேடன், வழியில் ஆமையைக் கண்டதும், அதைப் பிடித்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டு ஓடினான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த காகம், எலியிடம் வந்து 'அந்த வேடன் ஆமையைத் தூக்கிக் கொண்டு மானை விரட்டிப் போகிறான். மான் ஓடித் தப்பிவிட முடியும். ஆனால், ஆமை சிக்கிக் கொண்டு விட்டதே. போய் மானைக் கண்டு இதற்கு ஒரு வழி பார்க்க வேண்டும் வா!’ என்று கூறியது.

'வேடனிடமிருந்து நம் நண்பனான ஆமையை விடுவிக்காமல் நாம் உயிருடன் வாழ்வது சரியல்ல. வா, வா, விரைவில் போவோம்’ என்று எலி துள்ளிக் குதித்தோடியது.

காகம் வேகமாகப் பறந்து சென்று ஓடிக் கொண்டிருந்த மானைக் கண்டது.

'மான் குட்டி, மான் குட்டி, உன்னை விரட்டிக் கொண்டு வந்த வேடன், வழியில் தென்பட்ட ஆமை யாரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறான். இப்