பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
103

பற்றி ஆராய்ந்து, விண்வெளிப் பயணத்திற்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞான ரீதியில் முதன்முதலாக அறிவித்தார்.

திரவ எரிபொருளைப் பயன் படுத்தும் பாக்கெட்டை முதலில் வடிவமைத்தவரும் இவரே. விண்வெளி இயலின் தந்தை என்று இவா கருதப்படுகிறார்.

அமெரிக்காவில் ராக்கெட் பற்றிய ஆராய்ச்சிகள் செய்த ராபர்ட் ஹிட் சின்ஸ் கொடார்ட்' என்னும் விஞ்ஞானியால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரவ எரிபொருள் ராக்கெட் 1926-ம் ஆண்டு வானில் செலுத்தப்பட்டது.

விண்வெளிப் பயணத்திற்கு ராக்கெட் ஒரு வாகனமாகப் பயன்படுகிறது.

அந்தவரிசையில், ராக்கெட் மூலம் விண் வெளியில் கால்வைத்த முதல் வீரர் ரஷியாவைச் சேர்ந்த யூரிகாகரின் என்பவராலார்.

அதன்பிறகு விண்வெளிக்கு-ராக்கெட்டுகளின் பயணம் அதிகரித்தது. ரஷியாவையும், அமெரிக் காவையும் தொடர்ந்து இந்தியாவும் விண்வெளிக்குள் "ஆரியபட்ட” போன்ற கோள்களை அனுப்பியது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இந்திய விமானப்படை அதிகாரியாகவும், சிறந்தவிமான