பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
107

படுவதால்; இதற்கு வால் போன்ற ஒரு பாகம் ஏற் படுகிறது.

சூரிய ஒளியினால் துண்டப்படும் வாயுக்கள் கருவைச் சுற்றிலும், புகை மூட்டம் போன்ற ஒளி வட்டத்தை உண்டாக்குகின்றது. இது "கோமா” என்று அழைக்கப்படுகிறது.

வாயுக்கள் அதிகம் வெளியாகும் போது வால் போல் பெருகிக் கொண்டே போகிறது. சூரிய ஒளி யினால் இது பளப்பளமாக ஒளி விடுகிறது

சில வால்மீன்களுக்கு பல வால்கள் முளைப் பதும் உண்டு. வால்மீனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையக் குறைய வாலின் நீளம் அதிகமாகும்.

சூரியனிலிருந்து விலகிச் செல்லச் செல்ல வாலின் நீளம் குறைந்து கொண்டே வந்து; வெறும் நட்சத்திரம் போல் தோன்றி கடைசியில் பனிப்பந்தாகி மறைகிறது.

வால் நட்சத்திரத்தில் வாலாகக் காட்சியளிக் கும் துகள்கள் அனைத்தும் மீண்டும் உட்கருவு ன் சேர்வதில்லை. இதனால் ஒவ்வொரு முறை சூரியனைக் கடக்கும்போதும் வால்மீனின் என்ட குறைந்துகொண்டே வந்து; இறுதியில் காணாமற் போய்விடும். அதாவது மரணமடையும் என்றும் கூறலாம்.