பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கங்காதரன் கூறிய
நீரின் கதை


"வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ் தம் என்றுணரற் பாற்று"

-குறள்


மறுநாள் மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு கிராமத்துச் சிறுவர்கள் அனைவரும் மண்டபத்தில் ஒன்று கூடி, தேவகுமாரர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஆர்வத்தினால் அழகப்பனின் விழிகள் அறிவுக்கு விருந்தான கதை கூறிய அந்தப் புதிய நண்பர்களின் வரவை எதிர்நோக்கி அங்கு மிங்கும் துழாவின.

சொன்ன சொல் தவறாத தேவகுமாரர்கள் அவர்கள் யாரும் அறியாது எங்கிருந்தோ 'பளிச்' சென்று அவர்கள் மத்தியில் வந்து நின்றனர்.

அவர்களது மகிழ்ச்சி ஆரவாரம் அடங்குமுன் கங்காதரன் கூறினான்: