பக்கம்:படித்தவள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 शाdf "கவலைப்படாதே புதுசா பாண்ட்டு தைச்சி வைச்சிருக்கேன்; அது உனக்கும் சரிப் போகும்; கவலைப் படாதே மாட்டிக்கோ" என்றேன். உடனே புறப்பட்டாள். "ஆனந்தனையும் வரச் சொல்லி இருக்கலாமே” என்றேன். "அவர் மனைவி அவரை அனுப்ப மாட்டாள்; அவளும் விட்டு வரமாட்டாள்" "காரணம் ?” "இப்பத்தானே கலியாணம் ஆச்சு" "ஆனால் என்ன? கடன் எப்பவோ தீர்ந்து போய் இருக்குமே." "மர மண்டைன்னா உங்களைத்தான் சொல்லனும் திரும்பிப் பார்" என்றாள். திரும்பிப் பார்த்தேன்; யாரும் தொடரவில்லை. "கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள்" என்று சொன்னாள். "எல்லாம் மறந்துவிடுகிறது" "உங்களுக்கு நல்லது எல்லாம் மறந்து விடும்" என்று சிரித்துக் கொண்டே ஸ்கூட்டரின் பின் அது கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/110&oldid=802394" இலிருந்து மீள்விக்கப்பட்டது