பக்கம்:படித்தவள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனை நலம் மாலி அவன் என் பாலிய நண்பன்: ஏதாவது கிறுக்கிக் கொண்டே இருப்பான். அந்தக் கிறுக்கல் அவனை ஒர் ஒவியன் ஆக்கியது. அவன் திருமணத்துக்குப் போய் இருந்தேன்; அது திருத்தணியில் நடந்தது. சாப்பாட்டுக்கு ஒரே நெருக்கடி பிச்சைக்காரர்கள் வருவார்கள் அங்கே அடிக்கடி அதனால் ஏற்பட்டது அடிதடி, பிச்சைக்காரர் களோடு போட்டி போட்டுக்கொண்டு லட்சாதிபதிகள் இடம் பிடித்தனர். பசி இருவரையும் சம பந்திப்படுத்தியது. என் சட்டையை ஒரு பிச்சைக்காரன் கிழிக்கப் போய் அது தாறுமாறாகச் சிதைய என்னைப் பைத்தியக் காரன் என்று நாலுபேர் வெளியே தள்ளப் பரிதாபத்துக்குரிய நிலையில் மாலி வெளியேவந்து காப்பாற்றினான். இன்னும் அதை நான் மறக்கவே இல்லை; அந்தத் திருமணத்தையும் மறக்கவே இல்லை. அப்பொழுது பார்த்தது. பிறகு சந்திக்கவே இல்லை. சந்தித்தால் அதைப்பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சரியான கலியாணம்; இந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/150&oldid=802464" இலிருந்து மீள்விக்கப்பட்டது