பக்கம்:படித்தவள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை படி 183 அவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள்" என்றேன். "அது மட்டுமல்ல; கட்சித் தலைவர் கடுமையானவர்; ஊழலே தலை காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றேன். என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். "நீங்கள் பத்திரிகைகளைப் படித்துவிட்டு மாற்றுக் கட்சிக்காரர்கள் சொல்வதை நம்புகிறீர்கள். இதுவரை குற்றச் சாட்டுகள் அடுக்குகிற்ார்களே தவிர நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுவியிருக்கிறார்களா? ஊழல் என்பது எல்லாம் வெறும் புரளிதான்." . "ஆளும் கட்சி என்றால் அவர்களைப் பற்றி ஆளுக்கு ஒன்று பேசுவார்கள்; அதை எடுத்துக் கொள்ளக்கூடாது; எந்தக் கட்சி ஆட்சிக்கு வரட்டுமே அவர்களை இப்படித்தான் விமரிசிப்பார்கள். யாரையும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆதாரம் காட்டமுடிவதில்லை" என்றேன். என்னைவிட அந்தப் பெண்தான் அவர்களைக் கவர்ந்தாள். அவளை வைத்து வழக்குத் தொடுத்தால் ஆட்சியிடமிருந்து ஒரு லட்சமாவது பெறமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தார்கள். அதற்காக நிதிதிரட்ட உண்டி குலுக்கினார்கள். "என் வழக்கு விஷயமாக உள்ளே சென்றேன்; சப்-இன்ஸ்பெக்டர் ஆறி அடங்கி இருந்தார். படியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/185&oldid=802502" இலிருந்து மீள்விக்கப்பட்டது