பக்கம்:படித்தவள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 शााdf கஷ்டம் தேவை இல்லை; என் இஷ்டத்துக்கு விட்டு விடுங்கள்" என்றேன். "நல்ல காரியம்; அதற்கு மறுப்புக் கூறக்கூடாது; அம்மா இருந்தால் மறுக்க மாட்டார்கள்" என்று என் மனைவியைப் பல முறை கோயிலில் பார்த்தவர் கருத்துத் தெரிவித்தனர். "என் மனைவியின் ஈகைத் திறனைத் தடுத்து வாகைசூட எனக்கு விருப்பம் இல்லை; அது அவள் விருப்பம்" என்று கூறி முடிப்பதற்குள் அவள் வந்து அவர்களுக்கு அபயம் அளித்தாள். "பொதுக் காரியத்துக்குக் கேட்கிறார்கள்; அது தவறு என்று ஏன் தடுக்கிறீர்கள். இன்னும் இந்தத் தேசம் சோர்ந்து விடவில்லை; நல்லது நடக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; அதுதான் இந்தக் கோயில் திருப்பணி. அதை மதிக்க வேண்டும்” எனறாள். "கோயில் விழாவில் டிஸ்கோ நாட்டியமாம்; அதில் மாஸ்கோ கட்சிக்காரர் தலைமை வகிக்கிறாராம்" என்றேன். "நான் தான் சொன்னேன்; கோயிலுக்கு மக்கள் திரளாக வர வேம்டுமானால் கவர்ச்சி நாட்டியங்கள் தேவை: அவற்றை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அவள் அறிவின் முதிர்ச்சியைக் கண்டு வியந்தேன். எதிரிகள் எங்கோ இருக்கிறார்கள் என்று நினைத்தேன்; அவள் என் வீட்டிலேயே இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/190&oldid=802508" இலிருந்து மீள்விக்கப்பட்டது