பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் + 85 + எத்தகைய செல்வம் தமக்கு அருளவேண்டும் என்று சிதம்பர தேசிகனை அடிகள் வேண்டுவதை இம் மூன்று பாடல்களும் முறையிடுகின்றன. (இ) முடிசார்ந்த மன்னரும் மற்றும்உள் ளோரும் முடிவில்ஒரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணா வதும்கண்டு பின்னும்இந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம்உய்ய வேண்டும்என் றேஅறி வார்இலையே (7) மன்னர் முதல் மக்கள் அனைவரும் முடிவில் ஒரு நாள் மறைவது கண்டும் அம்பலவன் அடிசார்ந்து உய்ய வேண்டும் என்பதை அறிவார் இல்லையே என்று அடிகள் இரங்குகின்றார். (ஈ) காலை உபாதி மலம்சலம் ஆம்அன்றிக் கட்டுச்சியில் சால உபாதி பசிதாகம் ஆகுமுன் சஞ்சிதம்ஆம் மாலை உபாதி துயில்காமம் ஆம்.இவை மாற்றிவிட்டே ஆலம் உகந்துஅருள் அம்பல வா!என்னை ஆண்டருளே (8) 'எந்தவித உளைச்சலும் இல்லாமல் நின்னடி சேர அருள வேண்டும்’ என்று ஆலம் உகந்து ஏற்ற அம்பல வனை வேண்டுகின்றார் அடிகள் இப்பாடலில். (உ) ஊட்டுவிப் பானும் உறங்குவிப் பானும்இங்கு ஒன்றோடுஒன்றை மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை