பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 88 & பட்டினத்தடிகள் சோற்றுஆவி சுற்றுச் சுகம்அற்றுச் சுற்றத் துணியும்அற்றே ஏற்றானும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பார்களே (19) என்ற இப்பாடல் அப்பெருமானைச் சேவியாதவர் அடையும் பலனை அம்பலப்படுத்துகின்றது. (எ) அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை, நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை,எம் கத்தனை, பொன்அம் பலத்துஆடும் ஐயனை, காணக்கண்கள் எத்தனை கோடி யுகமோ தவம்செய்து இருக்கின்றனவே (20) அம்பலத்து ஆடல்புரியும் கூத்தனைக் காண வேண்டுவதற்கு பல கோடியுகங்கள் தவம் செய்து கிடக்கின்றன என்கின்றார் அடிகள். (2) திருச்செங்காடு: ஒரே பாடல் கொண்டது. நெருப்பான மேனியர் செல்காட்டில் ஆத்தி நிழல்அருகே இருப்பார் திருவுளம் எப்படி யோஇன்னம் என்னைஅன்னை கருப்பா சயக்குழிக் கேதள்ளு மோகண்ணன் காணரிய திருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே (3) திருவொற்றியூர்": இத்திருத்தலத்தைப் பற்றி இரண்டு அற்புதமான பாடல்கள். 2. படடினததார் சமாதி அடைந்த இடம். சென்னை வாழ் தன வணிக நகரத்தா பெருமக்கள தம் குடும்பத்தில் யாராவது சிவகதி அடைந்தால் அவர்கடகு எல்லா எமச் சடங்குகளும் பிறவும் இத்தலத்தில் செய்து வருவது இனறும் வழககமாக இருந்து வருகின்றது.