பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் # 91 & அகவை தாண்டி உலக வாழ்வைப் பதம் பார்த்தபின் படுக்கையில மலசலம் கழித்துக் கொண்டு இல்லத்தி லுள்ள அனைவரும் 'எப்பொழுது ஒழிவாரோ?' என்று ஏங்கித் தவிக்கும் நிலையிலுள்ள ஆணோ பெண்ணோ எவர் ஒருவர் மரித்த போதும் அழுகின்றார்கள். எல்லா அழுகைகளும் ஒன்றா? மூன்றாவது வகையில் இறந்து பட்டவர்க்காக அழுவது 'ஒப்புக்கு அழுகை' என்று சொல்லலாமல்லாவா? "மாரடிச்ச கூலி மடி மேலே’ என்று கூறும் ஒருவகை அழுகையும் உண்டு. இங்கு அழுபவர்கள் இறந்தவருடன் எவ்வகையிலும் தொடர் புடையவர் அல்லர். 'கூலிக்கு மார் அடிப்பவர்கள்’’. இவர்கள் பினம் மயானத்துக்குத் தூக்கும்போது முன் ஏற்பாட்டுடன் வருபவர்கள். அக்கம்பக்கத்திலுள்ளார் வியக்கும் வண்ணம் 'போலி அழுகை அழுபவர்கள். பிணம் தூக்கப்படும்போது உச்சகடத்தில் அழுகை சென்று ஒயும். பிணம் போன பின்பு தரகர்கள் இவர் களை வரிசையாக அமரச் செய்து இரண்டு அச்சு வெல்லமும், உழக்குப் பொட்டுக் கடலையும் ஒவ்வொ ருவருக்கும் வழங்குவார்கள். ஒளவைப் பாட்டிகூட இவ்வழுகையைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் போக்கில், 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? என்று கூறிச் செல்வதையும் நாம் அறிவோம். 3. நான் துறையூரில் (திருசசி மாவட்டம்) உயர்நின்ல பள்ளியில் தலைமையா சிரியனாகப் பணியாற்றியபோது (1941-50) - ஏதோ ஒர் ஆண்டில் ஒரு நாள என்னுடன் பணியாற்றிய இராமய்யா என்ற இளநிலை ஆசிரியர் எனக்கு இக்காட்சியை முன்னேற்பாடுடன் காட்டியதாக நினைவு.