பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் .# 99 3. உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்.இந்த ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாது.ஒன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோஇங்ங் னேவந்து மூன்றதுவே (22) 'எல்லாம அவன் செயல்; நடப்பது முன்வினைப் பயன்’ என்று உலகோருக்கு உணர்த்துவது இப்பாடல். ஊரீ உமக்குஓர் உபதேசம் கேளும்; உடம்புஅடங்கப் போரீர் சமனைக் கழுஎற்றும் நீற்றைப் புறந்திண்ணையில் சாரீ அனந்தலைச் சுற்றத்தை நீக்கிச் சகம்நகைக்க; ஏரீ உமக்கு அவர்தாமே தருவர் இணையடியே (39) 'உடம்பு எல்லாம் நீறு பூசி, புறத்திண்ணையில் கிடந்து, அனைத்தையும் துறந்தால், அவனே உமக்கு இணையடியை நல்குவன்’ என்பது ஊருக்கு உபதேசம். நாய்க்குஉண்டு தொண்டு; நமக்குஉண்டு பிச்சை; நமனைவெல்ல வாய்க்குஉண்டு மந்திர பஞ்சாட் சரம்;மதி யாமல்வரும் பேய்க்குஉண்டு நீறு திகைப்புஉண்டு: நின்ற பிறவிப்பிணி நோய்க்குஉண்டு; தேசிகன் தன்னருள் நோக்கங்கள் நோக்குதற்கே (43) 'ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று உண்டு’ என்ற உண் மையை அனைவர்க்கும் உணர்த்துவது இப்பாடல்.