பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் + 105 + இவற்றால் ஏற்படும் பரமாபர ஆனந்தம் மூன்று பாடல்களில் உணர்த்தப் பெறுகின்றது. சுரப்பு:அற்று வல்வினை சுற்றமும் அற்றுத் தொழிகள்அற்றுக் கரப்பு:அற்று மங்கையர் கைஇணக்கு அற்றுக் கவலைஅற்று வரப்பு:அற்று நாதனை வாய்ஆர வாழ்த்தி மனம்அடங்கப் பரப்பு:அற்று இருப்பதன் றோபர மாபரம் ஆனந்தமே (34) அனைத்தும் அற்று எம்பெருமானை வாழ்த்தி மனம் ஆனந்தம் அடைகின்றது. செல்வரைப் பின்சென் றுஉபசாரம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டிப் பரிதவி யாமல் பரானந்தத்தின் எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய்எனக்கு ஆம்இடத்தே அல்லல்அற்று என்றுஇருப் பேன்ஆல நீழல் அரும்பொருளே (38) பூரண ஆனந்தம் அடைந்த மனம் அல்லல் அற்று ஏகாந்தமாய் இருக்கும் நிலையைச் சுட்டுகின்றது என்ப தைக் காட்டுவது இப்பாடல். ஓங்கார மாய்நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து பாங்காய் முளைத்த பயன்அளித் தால்பதி னால் உலகு நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறைஉருவாய்