பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பட்டினத்தார் - படைப்புகள் $ 109 { வேறு இரண்டு பாடல்களில் இருக்கும் நிலைக ளைப் பொறுத்துக் கொண்டு. இருக்குமாறும் அனைத் தும் துயிலின் கனவு என்று கருதுமாறும் அறவுரை அருளுகின்றார். அழுதால் பயன்என்ன நொந்தால் பயன்என்ன ஆவதுஇல்லை தொழுதால் பயன்என்ன நின்னை ஒருவர் சுடஉரைத்த பழுதால் பயன்என்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப் படிவரு மோசலி யாதிருஎன் ஏழைநெஞ்சே (37) விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன்கயிலைப் பதியார் துடைப்பும்நம் பால்அணு காது பரானந்தமே கதியாகக் கொண்டுமற்று எல்லாம் துயிலில் கனவுஎனநீ மதியா திருமண மேஇது காண்நல் மருந்துணக்கே (42) என்ற பாடல்களில் இவற்றைக் கண்டு மகிழலாம். பிறிது மூன்று பாடல்களில் வேறு முறையில் தரப் பெறும் அறவுரை: இங்கு அதன் பித்து நிலையைக் கடிகின்றார். நான்எத் தனைபுத்தி சொன்னாலும் கேட்கிலை நல்நெஞ்சமே என்இப் படிகெட்டு உழலுகின் றாய்இனி ஏதும்இல்லா வானத்தின் மீனுக்கு வன்தூண்டில் இட்ட வகைஅதுபோல் போனத்தை மீள நினைக்கின் றனைஎன்ன புத்திஇதே (45)