பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 112 4 பட்டினத்தடிகள் ஒழியாப் பிறவி எடுத்துவங்கி ஏங்கி உழல்கின்றநெஞ்சே அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில்உன்னி விழியால் புனல்சிந்தி விம்மி அழுநன்மை வேண்டும்என்றே (56) என்ற பாடலில் ஆன்மிகத்துக்கு அழுகையும் வேண் டும் என்று குறிப்பிடுவர் அடிகள். அழுதலின் தத்துவம்: இத்தத்துவம் குழந்தை முதல் அருளாளர் வரை கைமேல் பலன் கொடுத்து வருகின் றது. குழந்தை அழுகிறது; அதனால் பிழைக்கின்றது. 'அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது பழமொழி யன்றோ! பிள்ளைப் பேறு ஏற்பட்ட இல்லத்திற்கு வருபவர்கள் 'குழந்தை அழுததா?’ என்று வினவும் வாசகத்தை நாம் கேட்டுள்ளோம். பிறந்தவுடன் குழந்தை அழவேண்டும். நூற்றுக்குத் தொண்ணுறுக்கு மேல் குழந்தைகள் அழுகின்றன; பிழைக்கின்றன. மருத் துவமனைகளில் பிறந்தவுடன் குழந்தை அழாவிட்டால் ஊசியால் அல்லது பிறவற்றால் ஊறுபடுத்திக் குழந் தையை அழச் செய்வதைப் பார்த்திருக்கின்றோம்; கேட் டும் உள்ளோம். கருவறையில் இருக்கும்போது சுவாசிக் கும் செயல் முதல் அனைத்தையும் அன்னையே செய் கின்றாள். பிறந்த பிறகு குழந்தையே அதனைச் செய்ய வேண்டும் என்பது இறைவனின் திட்டம், அழுதவுடன் நுரையீரல் (Lungs) செயற்படுகின்றது; குழந்தை சுவாசிக் கத் தொடங்கி விடுகின்றது. பிழைக்கின்றது. 2. வெண்பா நலவழிபாட்டின்போது பாடிய பாடல்களுள் வெண்பா யாபபில் பாடிய பாடல்களை ஈண்டுக் காண் டோம்.