பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 114 + பட்டினத்தடிகள் (12) திருவாரூர்: தியாகராசப் பெருமான் திருக்கோ யில் கொண்டிலங்கும் இத்திருத்தலம் பற்றி இரண்டு பாடல்கள். ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாள்என்று ஊர்ஊர்கள் தோறும் உழலுவீர் - நேரே உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர் விளக்குஇருக்கத் தீத்தேடு வீர் என்பது அவற்றுள் ஒன்று இது. (13) திரு.ஏகம்பம் (காஞ்சி): ஏகாம்பரநாதர் எழுந்தரு எளியிருக்கும் திருத்தலம்பற்றி ஒரு பாடல். எத்தனைஊர் எத்தனைவீடு எத்தனைதாய் பெற்றவர்கள் எத்தனைபேர் இட்டுஅழைக்க ஏன்என்றேன் - நித்தம் எனக்குக் களைஆற்றாய் ஏகம்பா கம்பா! உனக்குத் திருவிளையாட்டோ. என்பது அத்திருப்பாடல். (14) திருக்கச்சிக் காரோணம்: இது பற்றி ஒரு பாடல். அத்தி முதல்எறும்பி ரானஉயிர் அத்தனைக்கும் சித்தம் மகிழ்ந்தளித்த தேசிகா - மெத்தப் பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி இசிக்குதையா காரோன ரே என்பது அது. (15) திருக்காளத்தி: கண்ணப்ப நாயனார் புகழ் பெற்ற காளத்திபற்றி ஒரு பாடல். பொய்யை ஒழியாய் புலாலை விடாய்காளத்தி ஐயரை எண்ணாய் அறஞ்செய்யாய் - வெய்ய