பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 122 + பட்டினத்தடிகள் டியோ மனப்பாடம் ஆகிவிட்டது. அடிக்கடிச் சொல்லி மகிழ்வேன். இதுபற்றி இரண்டு நிகழ்ச்சிகள்: (1) 1943இல் நான் வித்துவான் தேர்வுக்குப் (துறை யூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாக இருந்த காலம் - வயது 27) படித்த காலம். சிவஞான முனிவரின் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி பாடங் கேட்க சென்னையில் பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜுலு ரெட்டியார் இல்லத்தில (13, வடக்கூர் செல்வ விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004) தங்கியிருந்த போது சீறாப் புராணம் பதிப்பிக் கும் பணியில் சென்னைப் பல்கலைக் கழக உருது - அரபி - பாரசீகம் துறையில் பணியாற்றிய டாக்டர் அப்துல் நயினார் அவர்கட்கு துணை புரிய மூன்று ஆண்டு நியமிக்கப் பெற்றிருந்தவர் முத்து சு.மாணிக்கவா சக முதலியார். பன்மொழிப் புலவரிடம் பரிந்துரைப்படி இப்பெரும் புலவர் அகநானூறு களிற்றியானை நிரை யில் 50 பாடல்கட்குப் பாடங் கேட்ட பெருமை உண்டு. முத்து சு.அவர்கட்குப் பல பிள்ளைகள். வறுமைப் பிணியால் துன்புற்றவர். ஒரு நாள் இப்பாட்டை அவரி டம் சொல்லி விட்டேன். அவர் தன்னை நோக்கிச் சொன்னதாக நினைத்துக் கொண்டார். (அப்போது அவ ருக்குப் பிள்ளைகள் அதிகம் என்பதும், வறுமையால் துன்புற்றார் என்பதும் எனக்குத் தெரியாது. பன்மொ ழிப் புலவர் பரிந்துரையால் இப்பணியில் அமர்ந்தவர்); வருந்தினார். பின்னர் இவர் துறவுக் கோலம் பூண்டு காஞ்சி முதலியார் மடத்தில் மடாதிபதியாக இருந்தவர். (2) சில ஆண்டுகள் கழித்து (1946 என்பதாக நினைவு) தவத்திரு சித்பவானந்த அடிகள் தொடர்பு