பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 1 தோரணவாயில் வெள்ளைப் பரிமுகர் தேசிக ராய்விர கால்அடியோம் உள்ளத் தெழுதியது ஒலையில் இட்டனம் யாம்.இதற்குஎன்? கொள்ளத் துணியினும் கோதுஎன்று இகழினும் கூர்மதியீர்! எள்ளத் தனைஉக வாது.இக ழாதுஎம் எழில்மதியே’ - வேதாந்த தேசிகள் படைப்பு ஏணியில் மனிதன் தான் உயர்ந்த நிலை யில் இருப்பவன். காலால் நடக்கும் உயிர் வகைகளுள் முதல் நிலையில் இருப்பவன். காலால் நடப்பவை யாவும் 'கால்நடை என்று பெயரால் வழங்குவதற்கு ஏற்ப மனிதனைத் தவிர ஏனையவை தோன்றிய நாள் தொட்டு இன்று வரை காலால் நடந்து கொண்டிருப்ப தால் 'கால்நடை என்ற பெயரை நிலையாகப் பெற்றுள் ளன. இவையெல்லாம் ஐயறிவு பெற்றுள்ளவை. மணி தன் மட்டிலும்தான் காலால் நடப்பதுடன் பல்வேறு வகை ஊர்திகளைக் கண்டறிந்தவன். விண்வெளிப் பய ணத்தில் பயன்படும் இராக்கெட்டு, விண்கலம் வரை கண்டறிந்து புகழ் பெற்றவன். இஃதெல்லாம் உடற் பயணம் பற்றியவை. எல்லாப் பிராணிகட்கும் 'ஆன்மா உண்டு. அது அப்படியே உடலுடன் நின்று வளர்ச்சி பெறாமல் குன்றிய நிலையிலேயே உள்ளது. மனிதனுடைய ஆன்மவளர்ச்சி பரமான்மாவை அடையும் வரை 1. தேசிகப் பிரபந்தம் - அதிகார சங்கிரகம் - 95 பட்டி-2