பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 18 4 பட்டினத்தடிகள் சேடத்தைக் குருதேவர் ஆணை வழி ஒழுகிய ஒரு சிவஞானி கையில் பிச்சையாக்க, அதனை அவர் பெற் றுக் குருநாதர் பிரீதியாக்கிப் பின் பசி தீர்ந்து சென்றார். இப்பாவச் செயலால் அவள் அப்பிறப்பில் கொடுந் துன்பங்களை அடைந்தாள். மறுபிறப்பில் நாயாய்ப் பிறந்து எப்படியும் ஞானியின் பசி தணித்த புண்ணியத் தால் பத்திரகிரியாருடைய உணவுச் சேடத்தை உண்டு வாழ்ந்திருந்தாள். இந்நிலையில், இந்த நாய்க்கும் பத்திரகிரியாருக்கும் இரு வினை ஒப்பு நேர்ந்திருந்தமையால் சிவபெருமான் இவர்களுக்கு முக்தியளிக்கத் திருவுளங் கொண்டார். ஒரு சித்த வேடத்துடன் பட்டினத்தடிகள் திருமுன் சென்று, ‘என்பசி தீர்க்க வேண்டும்’ என்று வேண்டி னார். பட்டினத்தடிகள் பத்திரகிரியாரின் நிலையை ஞானத்தால் உணர்ந்து, "ஐயன்மீர், அடியேன் இந்தக் கோவணத்தையே பாரமாகக் கருதுபவன். மேற்குக் கோபுர வாயிலில் ஒரு சமுசாரி உள்ளான். அவன் தேவரீருக்கு அன்னம் இடுவான். அவண் ஏகுவீர்” என்று ஆற்றுப்படுத்தினார். அங்ங்னமே அச் சித்தரும் பத்திரகிரியாரிடம் சென்று பட்டினத்தடிகள் பகன்ற தைக் கூறி அன்னம் அளிக்குமாறு வேண்டினார். சித்தர் கூறியவற்றைக் கேட்ட பத்திரகிரியார் மிகுந்த அச்சம் எய்தினார். நிகழ்ந்தவற்றைக் குறிப்பினால் உணர்ந்தார். 'இந்தப் பிச்சை ஒடும், இந்த நாய்க்குட்டி யும் அல்லவா அடியேனைச் சமுசாரி என்று குருநாதர் கூறும்படி செய்தன?’ என்று கூறிக் கோபத்தோடு ஒட்டை நாய் மீது வீசி எறிந்தார். ஒடும் உடைந்து சில்லிகளாயிற்று; நாயும் மாண்டது. பத்திரகிரியார் நிகழ்ந்தது உணர்ந்து, முத்தி ஒன்றே விரும்பியவராகி, 'திருப்புலம்பல்' என்ற பாட்டைப் பாடி அங்கேயே சிவபோகம் எய்தி இருந்தார்.